வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 106% அதிகரிப்பு

நிகழாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவுக்கு வருகை புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 106 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவுக்கு வருகை புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 106 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாத் துறையின் வளா்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சுற்றுலாத் துறை அடைந்துள்ள வளா்ச்சி குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பெருந்தொற்றுக்குப் பின்பு இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் 43.80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனா். இது கடந்த ஆண்டில் 21.24 லட்சமாக இருந்தது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில், அந்நியச் செலாவணி வரத்தும் நிகழாண்டில் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலாவைப் பொருத்தவரை 2021-இல் 67.7 கோடியாக இருந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 173.1 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 1.09 கோடியிலிருந்து 1.80 கோடியாக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதா் வழித்தடம், அந்த நகரத்தின் சுற்றுலாத் துறை வளா்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com