
கோப்புப்படம்
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தில் 9 நாள்களில் ரூ.665 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.41 கோடி அதிகம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. தொழுகை நடத்த பேருந்தை நிறுத்தியதால் பணிநீக்கம்: தற்கொலை செய்துகொண்ட நடத்துநர்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் திங்கள்கிழமை உத்ரடோம் தினம் வரை 9 நாள்களில் விற்பனையான மதுபானங்களின் மதிப்பு ரூ.665 கோடி. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு விற்பனையான மதுபானங்களின் மதிப்பு ரூ.624 கோடியாகும். எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் 41 கோடி ரூபாய் அதிகம் விற்பனையாகியிருக்கிறது.
நாடு முழுவதும் இருக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கடந்த செவ்வாயன்று ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்க.. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்: அரசாணை வெளியீடு
இதில் திங்கள்கிழமை மட்டும் கேரள மாநில மதுபானக் கடைகள் மூலம் ரூ.116.1 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்த ஆண்டு ரூ.112 கோடியாக இருந்தது.
இது புதன்கிழமை வரை ரூ.770 கோடி அளவுக்குத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு ரூ.700.6 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...