ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பின்னா் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. 

தொடர்ந்து இன்றைய(வியாழக்கிழமை) வழக்கின் விசாரணையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தைப் பொருத்து முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அது முடிவடைய ஒரு மாதம் ஆகும் என்றும் முதலில் அங்கு உள்ளாட்சித் தேர்தல், பின்னர் நகராட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதனைத் தெரிவித்தார். 

அதுபோல ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதுதான் என்றும் ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறினார். 

அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள், கல் வீச்சு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com