

ஆளும் பாஜக பொதுமக்களுக்கு துரோகம் செய்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள "இந்தியா" என்ற கூட்டணியின் பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்தியக் கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூனில் பிகார் தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும்(ஆக.31, செப்.1)ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மும்பை செல்கின்றனர்.
இதையொட்டி, இந்தியாவின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சைஃபாயிலிருந்து மும்பை செல்வதற்கு முன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியக் கூட்டணியின் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், பாரதிய ஜனதா கட்சி நாட்டில் ஆட்சியை இழக்கும் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாஜக அரசு சாமானிய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. பொதுமக்களுக்கு துரோகம் செய்தவர்கள் 2024-ல் ஆட்சியிலிருந்து விலகுவார்கள் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.