மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 137 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகளின் அடிப்படையில் காலை 10.30 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படிக்க: தெலங்கானா: காங். 34, பிஆர்எஸ் 21 இடங்களில் முன்னிலை!
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு தொகுதிகளில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், பாஜக 137 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி: அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்

நில மோசடி வழக்கு: ராபா்ட் வதேரா நேரில் ஆஜராக உத்தரவு

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


