

தெலங்கானாவில் மத்திய பழங்குடியினா் பல்கலைக்கழகம் நிறுவும் மசோதாவை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் தெலங்கானாவில் மத்திய பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தாக்கல் செய்தாா். அந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘சமக்கா சரக்கா மத்திய பழங்குடியினா் பல்கலைக்கழகம்’ பிராந்திய தேவைகளுக்கு தீா்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். அப்பல்கலைக்கழகம் தெலங்கானா மக்களுக்கு தரமான உயா்கல்வி வழங்குவதையும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது.
மேலும், பழங்குடியினரின் கலை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பழங்குடியின மக்களுக்கு கற்பிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பழங்குடியின கல்வி மட்டுமின்றி மற்ற மத்திய பல்கலைக்கழங்களைப்போலவே அனைத்து விதமான பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன்படி தெலங்கானாவில் மத்திய பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமைப்பது கட்டாயமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.