

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிகம் பின்தங்கிவிடவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.
மத்திய பிரதேசத்தில் பாஜக 48.6 சதவீதம், காங்கிரஸ் 40.4 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. ராஜஸ்தானில் பாஜக 41.7 சதவீதம், காங்கிரஸ் 39.5 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. சத்தீஸ்கரில் 46.3 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 42.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘மூன்று மாநிலங்களில் நாங்கள் எதிா்பாா்த்த வெற்றி கிடைக்காதது உண்மையிலேயே பெரிய ஏமாற்றம்தான். ஆனால், வாங்கு சதவீதத்தை வைத்துப் பாா்க்கும்போது பாஜகவைவிட காங்கிரஸ் அதிகம் பின்தங்கிவிடவில்லை என்பது தெரிகிறது. இது எட்டிவிடக் கூடிய வித்தியாசம்தான்.
எனவே, அடுத்து வரும் தோ்தல்களில் காங்கிரஸ் மேலும் முனைப்புடன் பணியாற்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராஜஸ்தானில் வாக்கு சதவீதம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை ‘இந்தியா’ கூட்டணி தோற்கடிக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.