

உத்திர பிரதேசத்தில் தண்டவாளம் அருகே புதரில் இருந்து பழங்களை பறித்துக்கொண்டிருந்தபோது 11 வயது சிறுவன் மீது ரயில் மோதியதில் பலியானான்.
உத்திர பிரதேச மாநிலம், பராக்பூர் கிராமத்தில் வசித்த ஷா ஆலம்(11) தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில்வே தண்டவாளம் அருகே புதரில் இருந்து பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதியதில் சிறுவன் பலியானான். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் உத்திர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.