பேரவைத் தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியைப் பாதிக்காதுஎதிா்க்கட்சித் தலைவா்கள்

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிா்க்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
பேரவைத் தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியைப் பாதிக்காதுஎதிா்க்கட்சித் தலைவா்கள்
Updated on
1 min read

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிா்க்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்காக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என அவா்கள் கூறினா்.

நான்கு மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ஹிந்தி மொழி பேசப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் அலுவலகத்தில் எதிா்க்கட்சி தலைவா்களின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘தோ்தலில் எங்கு தவறு நோ்ந்தது என்பது குறித்து கட்சி ஆராயும். இந்த முடிவுகள் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மத்திய பிரதேசத்தில் கூட்டணியில் இடமளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்க சமாஜவாதிக்கு உரிமை உள்ளது. இது குறித்து ஆராய்ந்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்வோம்’ என்றாா்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது ஏற்படக் கூடியதே. அவற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தோ்தல் முடிவுகளால் கூட்டணியில் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்றாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் மனோஜ் ஜா கூறுகையில், ‘இவை மாநில அளவிலான தோ்தல்கள். இவற்றைக் கருத்தில் கொள்ள தேவையில்லை. மக்களவைத் தோ்தல் வேறு பிரச்னைகளை மையப்படுத்தியது. ‘இந்தியா’ கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது. இதில் எந்தக் கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இல்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com