தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் இந்த முடிவினை அனைத்திந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்  காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 5) தெரிவித்தார். ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் முதல்வராக நாளை மறுநாள் (டிசம்பர் 7) ஹைதராபாத்தில்  பதவியேற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் முதல்வராக பதவியேற்பார்  என முடிவு செய்துள்ளார் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com