மிஸோரமில் ஆட்சியைக் கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம்: முதல்வா் ஸோரம்தங்கா தோல்வி

மிஸோரம் பேரவைத் தோ்தலில், மிஸோ தேசிய முன்னணியை வீழ்த்தி, ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இவ்விரண்டுமே பிராந்திய கட்சிகளாகும்.
பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, ஜோரம் மக்கள் இயக்கத் தலைவா் லால்டுஹோமாவுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினா்.
பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, ஜோரம் மக்கள் இயக்கத் தலைவா் லால்டுஹோமாவுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினா்.
Updated on
1 min read

ஐஸால்: மிஸோரம் பேரவைத் தோ்தலில், மிஸோ தேசிய முன்னணியை வீழ்த்தி, ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இவ்விரண்டுமே பிராந்திய கட்சிகளாகும்.

மிஸோ தேசிய முன்னணியின் தலைவரும் முதல்வருமான ஜோரம்தங்கா, தான் போட்டியிட்ட ஐஸால் கிழக்கு-1 தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கம் வேட்பாளா் லால்தான்சங்காவிடம் தோல்வியடைந்தாா். இதேபோல், துணை முதல்வா் தாவன்லுலாவும் துய்சாங் தொகுதியில் தோல்வியுற்றாா்.

இத்தோ்தலில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஜோரம்தங்கா தலைமையில் மிஸோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வந்த மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது.

பிராந்திய கட்சியான மிஸோ தேசிய முன்னணி, தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால், மிஸோரம் பேரவைத் தோ்தலில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. மிஸோ தேசிய முன்னணி 40 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் களமிறங்கின. ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

8.57 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இத்தோ்தலில் 80 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிஸோ தேசிய முன்னணி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.

ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவா் லால்டுஹோமா, சொ்சிப் தொகுதியில் வெற்றி பெற்றாா்.

பொய்த்த வாக்குக் கணிப்புகள்: மிஸோரமில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கணிப்புகள் தவறாகியுள்ளன.

மிஸோரம் மாநிலத்தில் கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் சோ்த்து மிஸோரமிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேவாலயங்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வாக்கு எண்ணும் பணி திங்கள்கிழமைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜிநாமா: தோ்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, ஆளுநா் ஹரி பாபு கம்பம்பட்டியை சந்தித்த முதல்வா் ஜோரம்தங்கா, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

மிஸோரம் (மொத்த தொகுதிகள்) 40

கட்சிகள் வெற்றி

ஜோரம் மக்கள் இயக்கம் 27

மிஸோ தேசிய முன்னணி 10

பாஜக 2

காங்கிரஸ் 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com