கார்கே, சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோரை ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார். 
கார்கேவுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு
கார்கேவுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோரை தெலங்கானா முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

119 உறுப்பினா்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தை கைப்பற்றியுள்ளன.

தெலங்கானா புதிய முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை (டிச. 7) பதவியேற்கவுள்ளாா்.

இதையடுத்து தில்லி சென்றுள்ள ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஹைதராபாத்தில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com