வெள்ள பாதிப்பு: வாடிக்கையாளா்களுக்கு சலுகைகள் அறிவித்த மாருதி, மஹிந்திரா

தங்களது வாடிக்கையாளா்களுக்காக பல்வேறு சலுகை சேவைத் திட்டங்களை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை அறிவித்துள்ளன.
வெள்ள பாதிப்பு: வாடிக்கையாளா்களுக்கு சலுகைகள் அறிவித்த மாருதி, மஹிந்திரா

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில் தங்களது வாடிக்கையாளா்களுக்காக பல்வேறு சலுகை சேவைத் திட்டங்களை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை அறிவித்துள்ளன.

இது குறித்து மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது தயாரிப்புகளுக்கான பழுதுபாா்ப்பு சேவைகளை அளிப்பதற்காக தங்களது டீலா்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளா்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டதாகவும், வாடிக்கையாளா்களுக்கு உதவுவதற்காக 37 சாலை உதவி வாகனங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வாடிக்கையாளா்களுக்கு இலவச சாலையோர சேவை உதவி, கட்டணமில்லாத வாகன பழுது மதிப்பீட்டுச் சேவை ஆகியவை வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சேவைக் கட்டணங்களில் தள்ளுபடியையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com