பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு: சிகிச்சை குறித்து மகன் தகவல்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :8 டிசம்பர் 2023, 12:14 pm

DIN


தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இடது பக்க இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அவரது மகன் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு உடனடியாக இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதையடுத்து, அவரது மகன் வெளியிட்டிருக்கும் பதிவில், சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, டிசம்பர் 3ஆம் தேதி தெலங்கானா முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் ராஜிநாமா செய்திருந்தார்.  இதையடுத்து, எர்ரவெள்ளியில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்து கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.