எம்பி பதவியை ராஜிநாமா செய்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். 

இதன்மூலம் பிஆா்எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றாா். துணை முதல்வராக மல்லு பாட்டீ விக்ரமா்காவும், இதர 10 அமைச்சா்களும் அவருடன் பதவியேற்றனா்.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வராக பதவியேற்றவுடனேயே ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை தில்லி சென்றுள்ளார். தொடர்ந்து, அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேவந்த் ரெட்டி, கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மல்கஜ்கிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com