தெலங்கானா: ஒரே நேரத்தில் 2 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்துள்ளார். 
revanthreddy101957
revanthreddy101957

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் முதல் இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்துள்ளார். 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி இந்த திட்டங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

துணை முதல்வர் மல்லு பாட்டீ விக்ரமர்கா, அமைச்சர்கள், தற்காலிக அவைத் தலைவராக இருக்கும் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ரேவந்த் ரெட்டி இரண்டு திட்டங்களையும் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று தொடங்கிவைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 

தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான உறுதிமொழியை சோனியா காந்தி நிறைவேற்றியது போல், 100 நாள்களுக்குள் 6 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்குப் பெயர் பெற்ற மாநிலமாக தெலங்கானாவை மாற்ற காங்கிரஸ் அரசு பாடுபடும் என்றார்.

டிசம்பர் 9 தெலங்கானாவுக்கு ஒரு பண்டிகை நாள். மக்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தாயைப் போல் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியது சோனியா காந்திதான் என்றும் அவர் தெரிவித்தார். 

அதன்படி, முதல் வாக்குறுதியாக, ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ சுகாதார திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான சுகாதார காப்பீட்டைத் தொடங்கிவைத்தார். 

மகாலட்சுமி திட்டத்தின் கீழ்,  பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இன்று முதல் இரண்டு திட்டங்களும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. 

மேலும் இந்நிகழ்ச்சியில், குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 கோடி காசோலையை ரேவந்த் ரெட்டி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com