ஓடும் ரயிலில் பாய்ந்த சிறுத்தை!

சிறுத்தை ஒன்று சரக்கு ரயிலில் பாய்ந்த நிகழ்வு குஜராத்தில் நடந்துள்ளது.
மாதிரி படம் (Pexels)
மாதிரி படம் (Pexels)
Updated on
1 min read

சூரத் நகரின் வெளிப்புறக் காட்டுப்பகுதியில் சரக்கு ரயில் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து இறந்துள்ளதாக அப்பகுதி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறைக்கு அதிகாலை 6 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து  அந்தப் பகுதிக்குச் சென்று சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளதாக வனத்துறை அதிகாரி ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சூரத் அம்ரோலி பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் காண்பது அரிது. தெற்கு குஜராத் காட்டுப்பகுதியில் இருந்து இந்தச் சிறுத்தை வந்திருக்கலாம் என அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களைப் பொருத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2016-ம் ஆண்டு சிறுத்தைகளின் எண்ணிக்கை 1,395 ஆக இருந்தது. 2023 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 2,274 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com