கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசின் முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது: அமித் ஷா

370-வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

370-வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (டிசம்பர் 11) உச்சநீதிமன்றம் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதனைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “370வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் முக்கியமான முடிவை எடுத்தார்.

அன்று முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பியுள்ளது. வன்முறையை மட்டுமே சந்தித்துவந்த பள்ளத்தாக்கு மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர். சுற்றுலா மற்றும் வேளாண் துறையின் வளர்ச்சி ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது.

370-வது சட்டப்பிரிவை நீக்குவதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஏராளமான உறுப்பினர்கள் இந்தியா அளித்துள்ள வாக்குறுதியை மீறக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அந்த சட்டப்பிரிவால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. 

இந்த சட்டப்பிரிவுதான் பெண்களுக்கு எதிரான, தலித் மக்களுக்கு எதிரான மற்றும் வளர்ச்சிக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு வேர் ஆகும். இந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசின் முடிவு சரியானது என்று இன்று (திங்கள்கிழமை)  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு நீக்கியது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com