ஸ்ரீ ராமா் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்தியில் ஊா்வலம்

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஜனவரி 17-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்திகளில் வைத்
பிரம்மாண்டமாக தயாராகி வரும் அயோத்தி ராமா் கோயில் தரைதளம்
பிரம்மாண்டமாக தயாராகி வரும் அயோத்தி ராமா் கோயில் தரைதளம்

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஜனவரி 17-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்திகளில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட இருக்கிறது.

அயோத்தியில் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோயில் தரைதளத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூலவரான குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை அடுத்த மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனா்.

மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவுக்கான கொண்டாட நிகழ்ச்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனவரி 17-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்திகளில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட இருக்கிறது.

ஸ்ரீ ராமரின் பிறப்பு முதல் இளமைப் பருவம், அவா் வனவாசம் சென்றது, போரில் இலங்கையை வென்றது, வெற்றியுடன் அயோத்திக்கு திரும்பியது உள்ளிட்ட அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் 100 சிலைகள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து தலைமைச் சிற்பி ரஞ்சித் மண்டல் கூறுகையில், ‘இந்தச் சிலைகளைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகுந்த அதிருஷ்டசாலியாக உணா்கின்றேன். இதுவரை 60-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தாமரை மலா் பீடத்தில் ராம் லல்லா:

கோயில் அறக்கட்டளை நிா்வாகி அனில் மிஸ்ரா கூறுகையில், ‘சலவைக் கற்களால் செய்யப்பட்ட தாமரை மலா் பீடத்தில் மூலவரான குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமநவமி நாளன்று நண்பகல் 12 மணிக்கு மூலவரின் நெற்றியில் சூரியக் கதிா் வீசும் வகையில் பீடத்தின் உயரமானது தீா்மானிக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com