
மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை அமர்வில், மார்ச் 2024-ல் நிறைவடையும் நிதியாண்டுக்கான நிகர கூடுதல் செலவினங்கள் ரூ.58,378 கோடிக்கு அவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒட்டுமொத்த கூடுதல் செலவினங்கள் ரூ.1.29 லட்சம் கோடியில் 70 ஆயிரம் கோடி அரசின் சேமிப்பு மற்றும் வருவாய் மூலமாக சமன் செய்யப்பட்டுள்ளது.
மானியங்களுக்கான கூடுதல் நிதி கோரிக்கைகள் குறித்து அவையில் விவாதம் எழுந்தபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக நலத்திட்டங்களுக்கான செலவுகளில் சமரசம் செய்து கொள்ளாமல் அரசு செலவுகளை நிர்வகிப்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகர கூடுதல் செலவுகளில் நடப்பு நிதியாண்டில் அரசால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் ரூ.58,378.21 கோடி ஆகும்.
மற்றைய செலவுகளில் ரூ.13,351 கோடி உர மானியம் உள்பட பல்வேறு செலவுகளும் ரூ.7,000 கோடி உணவு மற்றும் பொது பகிர்மான துறையால் செலவிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் கூடுதல் செலவுகளான ரூ.9,200 கோடியையும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.14,524 கோடியையும் அவை ஒப்புதல் அளித்தது.
மத்திய வெளியுறவு துறையின் கூடுதல் செலவுகளுக்கான நிதி கோரிக்கையான ரூ.20,000 கோடி, குறைக்கப்பட்ட செலவினங்களான 9000 கோடி ரூபாயில் சரி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு!
இந்த நிதியாண்டிற்கான பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதம் என அரசு நிர்ணயித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.