ராஜஸ்தான் முதல்வராக டிச.15ல் பதவியேற்கிறார் பஜன் லால் சர்மா!

ராஜஸ்தான் முதல்வராக டிச.15ல் பதவியேற்கிறார் பஜன் லால் சர்மா!

ராஜஸ்தானின் முதல்வராக பஜன் லால் சர்மா டிசம்பர் 15-ம் தேதி பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் அறிவித்துள்ளது. 
Published on

ராஜஸ்தானின் முதல்வராக பஜன் லால் சர்மா டிசம்பர் 15-ம் தேதி பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் அறிவித்துள்ளது. 

ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வரை தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. 

இந்த கூட்டத்தில் எம்எல்ஏவான சர்மா, பாஜக சட்டமன்ற கூட்டத்தில் ராஜ்நாத் சிங், சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் முதன்முறையாக முதல்வராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 15 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணிக்கு ஆல்பர்ட் ஹாலுக்கு வெளியே பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

வித்யாதார் நகர் எம்எல்ஏ தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைரவா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகவும், அஜ்மீர் வடக்கு எம்எல்ஏ வாசுதேவ் தேவ்நானி பேரவைத் தலைவராகவும் பதவி ஏற்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com