டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆந்திரம்: மருத்துவமனையில் தீ விபத்து - 50 நோயாளிகள் உயிர் தப்பினர்!

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2023, 1:20 pm

DIN

விசாகப்பட்டினம் : ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், இன்று(டிச.14) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

விசாகப்பட்டினத்திலுள்ள இந்தஸ் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், மருத்துவமனையில் இருந்த 50-70 க்கும் நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டதாவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அறுவை சிகிச்சை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அங்கிருந்து மளமளவென பிற பகுதிகளுக்கும் தீ பரவியதாக தெரிய வந்துள்ளது.  இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.