உலகின் மிகப்பெரிய தியான மையம்: வாராணசியில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

உலகின் மிகப்பெரிய தியான மையம்: வாராணசியில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

வாராணசியில் உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேத மகாமந்திரை பிரதமர் மோடி இன்று(டிச.18ல்) திறந்து வைத்தார்.
Published on

வாராணசியில் உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேத மகாமந்திரை பிரதமர் மோடி இன்று(டிச.18ல்) திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தைத் திறந்துவைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். 

வாராணசியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள உமரஹா பகுதியில் அமைந்துள்ள இந்த மகாமந்திர் 3,00,000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ளது. அதன் சுவர்கள் மக்ரானா பளிங்கில் பொறிக்கப்பட்டுள்ளது. 

ஏழு தளங்களைக் கொண்ட ஸ்வர்வேத மகாமந்திர் 125 இதழ்கள் கொண்ட தாமரை குவிமாடங்கள் மற்றும் பிரமிக்கவைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தியான மையங்களில் ஒன்றாகும். 

மகாமந்திரின் கடந்த 2004ஆம் ஆண்டு சத்குரு ஆச்சார்யா ஸ்வந்தந்திர தேவ் மற்றும் சந்த் பிரவர் விக்யான் தேவ் ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த கட்டுமானம் 600 தொழிலாளர்கள் மற்றும் 15 பொறியாளர்களின் கூட்டு முயற்சியால் உருவானது. கோயிலில் 101 நீரூற்றுகள், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மர கூரைகள் மற்றும் கதவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மகாமந்திரத்தின் சுவர்களில் ஸ்வர்வேதத்தின் வசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு மணற்கற்கள் சுவர்கள் அலங்கரித்துள்ளது. மேலும் மருத்துவ மூலிகைகள் கொண்ட அழகான தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. 

நித்திய யோகியும், விஹங்கம் யோகாவின் நிறுவனருமான சத்குரு ஸ்ரீ சதாஃபல் தியோஜி மஹராஜ் எழுதிய ஆன்மீக உரையான ஸ்வார்வ்வின் பெயரால் இந்த கோயிலுக்குப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com