
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம்செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இண்டிகோ விமானத்தில் 7.8 கோடி பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து புதிய மைல்கல்லாக இண்டிகோ விமானம், நடப்பாண்டில் இதுவரை 10 கோடி பேரை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 22% அதிகம்.
நேற்று(திங்கள்கிழமை) தில்லி - பெங்களூரு விமானப் (6E-6118) பயணம் முடிவடைந்ததும் இண்டிகோ இந்த சாதனையை எட்டியுள்ளது. தினமும் சுமார் 2,000 விமானங்களை இண்டிகோ இயக்குகிறது.
இதையும் படிக்க | மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்!
அதிலும் பல முறை என்ஜின் கோளாறுகள் ஏற்பட்டு விமானம் முன்கூட்டியே தரையிறங்கியபோதிலும் இண்டிகோ இந்த சாதனை படைத்துள்ளது.
தற்போது இண்டிகோ நிறுவனம் அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் அதுநேரத்தில், பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.