கோப்புப்படம்
கோப்புப்படம்

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  தேர்வு செய்து வருகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level Examination, முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு  செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை பொறியாளர் (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)  தேர்வு முதல் தாள் (CBE) அடுத்தாண்டு மே - ஜூன் மாதத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com