

கர்நாடகத்தில் வெறிநாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவண்டி கிராமத்தில் வெறிநாய் ஒன்று பொதுமக்கள் துரத்தி, துரத்தில் கடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த உள்ளூர் அதிகாரிகள் காயங்களுடன் நாயை பிடித்தனர்.
இருப்பினும், அந்த நாய் பின்னர் இறந்தது. நாய் கடியால் காயமுற்ற எட்டு பேர் மாவட்ட மருத்துவமனையிலும், மற்றவர்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நான்கு வயது சிறுமி உள்பட 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
வெறிநாய் கடிக்கு 25 பேர் காயமுற்ற சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.