உலகப் போர்கள், பெருந்தொற்றுகள் கடந்த மேட்ரிட் மெட்ரோவுக்கு வயது 104..!

1919-ல் இயங்க ஆரம்பித்த ஸ்பெயின் நாட்டின் மெட்ரோ பொறியியல் அதிசயம் என அப்போது அழைப்பட்டது.
மேட்ரிட் மெட்ரோ | PTI
மேட்ரிட் மெட்ரோ | PTI

ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரீட் மெட்ரோ 1919-ம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகுந்த சிக்கலான காலக் கட்டத்தில் கட்டப்பட்ட இந்த மெட்ரோ 104 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

முதல் உலகப் போர் மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சல் உருவான காலக் கட்டத்தில் இந்த மெட்ரோவுக்கான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் தொடர், பொறியியல் அதிசயம் என அப்போது புகழப்பட்டது.

மேட்ரிட் மெட்ரோவின் ஒருங்கிணைப்பாளர் அன்டானியோ லேராஸ், இந்தியாவில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து மாநாடு 2023-ல் கலந்துக் கொள்ள வருகை தந்தார்.

முதல் உலகப் போரில் ஸ்பெயின் நாடு பங்கேற்காத போதும் அதன் தாக்கம் உலகம் முழுவதும் இருந்துள்ளது. அந்தக் காலக் கட்டத்தில் 1918-ம் ஆண்டில் இப்போதைய கொரானா போல ஸ்பானிஷ் காய்ச்சல் பெரும்தொற்று நோயாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து லேராஸ், இவற்றால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேட்ரிட் மெட்ரோ முதன்முதலில் அக்.31, 1919 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. 3.48 கிமீ அளவுக்கு இருந்த ரயில் தொடர் இன்றைக்கு 295 கிமீ அளவுக்கு விரிந்து 303 நிலையங்களோடு இயங்கி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

அப்போதைய டிராம் வண்டிகளுக்கு மாற்றாக அரை மணி நேரத் தூரத்தை 10 நிமிடங்களில் கடக்க இந்த ரயில் உதவியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஸ்பெயில் உள்நாட்டு கிளர்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது  மக்கள் பதுங்குவதற்கான இடமாக மேட்ரிட் மெட்ரோ அமைந்தது.

இப்போது 100 ஆண்டுகள் கடந்த நிலையில் வரலாற்றுப் புகைப்படங்கள், நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேட்ரிடில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருவதாகவும் முதல் ரயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com