நிதிக் குழுவின் புதிய தலைவராக பனகாரியா நியமனம்

இந்தியாவின் நிதிக்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் ஆலோசகரும், நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிக் குழுவின் புதிய தலைவராக பனகாரியா நியமனம்

புதுதில்லி: இந்தியாவின் நிதிக்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் ஆலோசகரும், நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக கடந்த 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்பட்டது. இந்த திட்டக்குழுவின் தலைவராக பிரதமர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என சுதந்திர நாள் உரையின்போது தெரிவித்தார். 

அதன்படி, 2015 ஜனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நீதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் செயல்படுவார், துணைத் தலைவர் மற்றும் 5 நிரந்த உறுப்பினர்கள் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். 

அதன்படி, நரேந்திர மோடி தலைமையிலான இந்த குழுவின் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனாகரியா நியமிக்கப்பட்டார்.  2017 இல், பனகாரியா தனது பதவியில் இருந்து விலகி மீண்டும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் பணிக்கே திரும்பினார். 

இந்த நிலையில், நிதி குழுவின் புதிய தலைவராக மத்திய அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியாவை,  நிதிக் குழுவின் புதிய தலைவராக  மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, மத்திய அரசு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மாநிலங்களின் வருவாய் மானியங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அவர்களின் வருவாயின் மானியங்கள் மூலம் எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்கும், பொது நிதி குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கு  நிதிக் குழு அமைக்கிறது.

தற்போது, மத்திய அரசு  42 சதவிகித வரிகளை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

"ஆணையம் தனது அறிக்கையை அக்டோபர் 31, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1952 செப்டம்பர் 30  இல் இந்தியாவில் பிறந்த பனகாரியா, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர்.

இந்த மாத தொடக்கத்தில், 2026 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அந்த ஆண்டில் 5 டிரில்லியன் டாலர்களைத் தொடும் என்றும் பனகாரியா கூறினார். "இந்த விகிதத்தில், தற்போதைய டாலர்களில் இந்தியாவின் ஜிடிபி 2026-ல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2027-ல் 5.5 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும். அதாவது 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன என பனகாரியா தெரிவித்திருந்தார். 

பனகாரியா ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர். அவர் உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com