ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி; 50 புதிய விமான நிலையங்கள்!

ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி; 50 புதிய விமான நிலையங்கள்!

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Published on

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், நெடுஞ்சாலை பணிகள் போன்ற பொதுப் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com