பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நாடாளுமன்றத்தில் இன்று.. ஒரு பக்கம் 'மோடி மோடி', மறுபக்கம் 'ஜோடோ ஜோடோ'

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

News image

நாடாளுமன்றத்தில் இன்று.. ஒரு பக்கம் 'மோடி மோடி', மறுபக்கம் 'ஜோடோ ஜோடோ'

Updated On :1 பிப்ரவரி 2023, 4:13 pm IST

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருபக்கம் மோடி மோடி என்ற கோஷமும், இதற்கு எதிராக மறுபக்கம் ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்ற முழக்கமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

பட்ஜெட் தாக்கல் செய்த போது, திடீரென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதும் தாமதிக்காமல், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று முழங்கினர்.

இதனைப் பார்க்கும் போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறப்பான எதிர்தாக்குதல்களைக் கொடுக்கவும் செய்யவும் எதிர்க்கட்சிகள் மிகத் தயாராக வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க பல பிரச்னைகள் காத்திருக்கும் நிலையில், இந்த கோஷங்கள் இன்று எதிரொலித்தன். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்து, 12.40 மணியளவில் நிறைவு செய்தார்.

அவா் தாக்கல் செய்தது 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.