
பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்று இனி பான் கார்டை அடையாள அட்டையாகவும், முகவரி ஆதாரமாகவும் பயன்படுத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.