பிரதமா் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.22.76 கோடி: மாநிலங்களவையில் தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2019-இல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா்; இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2019-இல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா்; இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வீ.முரளீதரன் எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-இல் இருந்து பிரதமா் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை 21. இதில், ஜப்பானுக்கு 3 முறையும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தலா 2 முறையும் சென்றாா்.

அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் இருந்து குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.6.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 7 பயணங்களும், தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒரு பயணமும் (பிரிட்டன்) மேற்கொண்டுள்ளனா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 86. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.20.87 கோடி என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com