
மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மற்றொருபுறம் மருந்துகளின் மூலக்கூறு, உற்பத்தியை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வகங்களுக்கும் அவ்வப்போது அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 105 ஆய்வகங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் மட்டும் 5 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி நடவடிக்கைகள், மூலக்கூறு விகிதங்களில் மாறுபாடு இருந்தாலோ, தரக் குறைபாடு இருந்தாலோ அந்த ஆய்வகங்கள் மூலம் அவை மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.