2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள்: எய்ம்ஸ்

2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் பதிவாகும் என்றும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வினை மேற்கோள்காட்டி  எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள்: எய்ம்ஸ்
2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள்: எய்ம்ஸ்


புது தில்லி: வரும் ஆண்டுகளில் புற்றுநோய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், 2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் பதிவாகும் என்றும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வினை மேற்கோள்காட்டி  எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லி - எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியில் அறுவைசிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறுகையில், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது ஆண்டுதோறும் 13 - 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது. இது 2026ஆம் ஆண்டில் 20 லட்சத்தைத் தொடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கொள்கை இடைவெளியை மூடுதல் என்பதே. புற்றுநோய் தொடர்பாக இருக்கும் ஏராளமான மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து, இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த முடியும் என்பதை மக்களிடையெ எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com