தடகளப் பள்ளிக்காக கொடுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு: பி.டி. உஷா

பழம்பெரும் இந்திய தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பி.டி. உஷா கோழிக்கோடு அருகே பாலுச்சேரியில் உள்ள தனது தடகளப் பள்ளியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக இன்று புகார் அளித்துள்ளார்.
பி.டி. உஷா
பி.டி. உஷா


திருவனந்தபுரம்: பழம்பெரும் இந்திய தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பி.டி. உஷா கோழிக்கோடு அருகே பாலுச்சேரியில் உள்ள தனது தடகளப் பள்ளியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக இன்று புகார் அளித்துள்ளார்.

30 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்த தனது பள்ளியில் பல பெண்கள் தங்கி பயிற்சி பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்காக கொடுக்கப்பட்ட எங்கள் சொத்தில் சில கட்டுமானங்கள் தொடங்கியுள்ளதை நாங்கள் கவனித்தோம். இது குறித்து நான் முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளேன். பெண் குழந்தைகள் இருப்பதால் பாதுகாப்பு அவசியம் என்ற நிலையிலும் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்றார்.

புகாரை அடுத்து, அங்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com