இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி

தில்லி உள்பட நாடு முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இளம்பெண் ஷ்ரத்தா வாக்கா் படுகொலை வழக்கில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி

தில்லி உள்பட நாடு முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இளம்பெண் ஷ்ரத்தா வாக்கா் படுகொலை வழக்கில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினா் தயாா் செய்துள்ள 6,600 பக்க குற்றப்பத்திரிகையில் மேலும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் ஆஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்தனா்.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகே வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆஃப்தாபை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் 6,000 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினா் தயாா் செய்துள்ளனா்.

இந்த குற்றப்பத்திரிகை வாயிலாக தெரிய வந்திருக்கும் சில தகவல்கள் என்னவென்றால், அஃப்தாப் கற்களை கூழாக்கும் இயத்திரத்தின் மூலம், ஷ்ரத்தாவின் சில எலும்புப் பகுதிகளை கூழாக்கி அகற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

அஃப்தாப்புக்கு தில்லி முதல் துபை வரை ஏராளமான பெண் தோழிகள் இருப்பதாகவும், இதுவும் ஷ்ரத்தா - அஃப்தாப் சண்டைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

தனது பெண் தோழிகளில் யாராவது வீட்டுக்கு வரும் போது, அஃப்தாப், ஃபிரிட்ஜில் இருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வெளியே எடுத்து சமையலறையின் கீழ் அலமாரியில் யாரும் பார்க்க முடியாத வகையில் வைத்துவிடுவார் என்றும், தோழி வெளியே சென்றதும் மீண்டும் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் வாக்குமூலத்தில் அஃப்தாப் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அஃப்தாப் மே 18 ஆம் தேதி ஷ்ரத்தாவை கொலை செய்த அன்று இரவு ஆன்லைன் மூலம் சிக்கன் ரோல் வாங்கி அமைதியாக சாப்பிட்டு முடித்துள்ளார்.

சுமாா் 100 சாட்சிகளின் பெயா்கள், குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், தடயவியல் ஆதாரங்கள், மரபணு பரிசோதனை அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டாலும் கூட, ஷ்ரத்தாவின் மண்டைஓடு இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கொலை நடந்ததற்கான சாட்சிகள்தான் மிகவும் முக்கியம். அஃப்தாப்பின் வாக்குமூலத்தை மட்டு நீதிமன்றம் எடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்காது.

குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், குற்றவாளிக்கு எதிரான மிகத் துல்லியமான சாட்சி என்ற காவல்துறையினரால் பெரியஅளவில் எதையும் காட்ட முடியாத நிலையில், தடய அறிவியல் துறையினரை மட்டுமே காவல்துறை நம்பியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com