வீடு, வாகனக் கடன் வட்டி உயர்கிறது! ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 
வீடு, வாகனக் கடன் வட்டி உயர்கிறது! ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ வட்டி விகிதம்) 6.25 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும், பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்றும் உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். 

ரெப்போ வட்டி விகிதம் உயர்வையடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். 

கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com