விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 334 கிலோ எடைக் கொண்ட 3 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வெள்ளிக்கிழமை (பிப்.10) விண்ணில் பாய்ந்தது. 
விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்!
Published on
Updated on
1 min read

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 334 கிலோ எடைக் கொண்ட 3 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வெள்ளிக்கிழமை (பிப்.10) விண்ணில் பாய்ந்தது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து காலை 9.18 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. 

இஸ்ரோவின் மிகுந்த வெற்றிகரமான பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடை வரையிலும், அதிக திறன்மிக்க ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

இந்த நிலையில், எடை குறைந்த செயற்கைக்கோள்களை(500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி (ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்-எஸ்.எஸ்.எல்.வி). ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. 120 டன் எடைகொண்ட இந்த ராக்கெட்டுக்கான செலவு ரூ. 30 கோடிக்குள் அடங்கிவிடும்.

இந்த நிலையில், இஸ்ரோ வடிவமைத்துள்ள மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட் மூலம் தற்போது 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன. 

முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிா்கால தேவைக்கான ஆய்வு பணிகளுக்காகவும், அமெரிக்காவின் ஜானஸ், இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

தற்போது ராக்கெட் ஏவுதலின் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com