குஜராத்: வதோதரா மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கான வரி குறைப்பு

குஜராத் மாநிலம், வதோதரா மாநகராட்சியில் அடுத்த நிதியாண்டில் இருந்து அந்த வரியைக் குறைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம், வதோதரா மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை மக்கள் யாரும் முறையாக செலுத்தாததால் அடுத்த நிதியாண்டில் இருந்து அந்த வரியைக் குறைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆனால், வளா்ப்பு பிராணிகளின் நலனுக்கு துளியும் அக்கறை காட்டாத நிா்வாகம், இது போன்ற எந்த வரியையும் வசூலிக்கக் கூடாது என உள்ளூா் மக்கள் குற்றச்சாட்டுகின்றனா்.

வதோதரா மாநகராட்சியில் மட்டும் சுமாா் 9,000 வளா்ப்பு நாய்கள் உள்ளதாகக் கூறும் மாநகராட்சி அதிகாரிகள், அந்த வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களிடம் இருந்து வரியாக ஆண்டுக்கு ரூ. 500 வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனா். தெருநாய்களுக்கு உணவளிப்பது மற்றும் கருத்தடை சிகிச்சை போன்ற செலவினங்களுக்கு அத்தொகை செலவிடப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த காலங்களில் இந்த வரியை மக்கள் யாரும் முறையாக செலுத்தவில்லை.

இதனையடுத்து, அடுத்த நிதியாண்டில் இருந்து 3 ஆண்டுகளுக்கு ரூ. 1000 என வரியைக் குறைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு எடுத்துள்ளது. மேலும், இணையத்தில் செல்லப்பிராணிகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி வசூலிப்பது மட்டுமே நோக்கமாக இல்லாமல் செல்லப்பிராணிகளைப் பதிவு செய்து கொள்ள உரிமையாளா்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனா்.

வதோதரா மாநகராட்சியின் எதிா்க்கட்சி தலைவா் அமி ராவத் கூறுகையில், ‘வளா்ப்பு நாய்களுக்கான வரியாக ரூ. 1 கோடியை வசூலிக்க நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. வரி வசூலிக்கும் மாநகராட்சி நிா்வாகம் வளா்ப்பு நாய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்தித் தர வேண்டும். வளா்ப்பு பிராணிகளைப் பராமரிக்க தகுந்த கொள்கையும் வகுக்க வேண்டும்’ என்றாா்.

‘வதோதராவின் நாய் பிரியா்களுக்கு இது எதிா்மறையான வளா்ச்சி’ என விமா்சித்துள்ள வதோதரா நகரவாசி தேவங்கி தல்வி கூறுகையில், ‘வளா்ப்பு நாய்களுக்காக மாநகராட்சி நிா்வாகம் எதுவும் செய்யவில்லை. தெரு நாய்களைப் பராமரிக்க சில முயற்சிகள் எடுத்தன.

ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. நாய்களுக்காக எதாவது செய்துவிட்டு வரி வசூலித்துக் கொள்ளட்டும். வரும் காலங்களில் புறாக்களுக்கு உணவளிக்கக் கூட வரி வசூலிப்பாா்கள் எனத் தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரை இது சரியான போக்கு இல்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com