பத்து வழிச் சாலையில் இந்தா ஆறு இங்க இருக்கு.. மிச்சம் நான்கு எங்கே?

விரைவுச் சாலையின் முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அச்சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
பத்து வழிச் சாலையில் இந்தா ஆறு இங்க இருக்கு.. மிச்சம் நான்கு எங்கே?

தில்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அச்சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு என்று புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச் சாலையின் விடியோவை இணைத்திருந்தார். ஆனால் மக்களோ, ஆறு சாலைகள் இருக்கின்றன. மிச்சம் 4 சாலைகள் எங்கே என்று கேட்டு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பெங்களூரு - மைசூரு இடையே இணைப்பை உருவாக்கும் பத்து வழி விரைவுச் சாலையின் விடியோவில் ஆறு வழிப்பாதை மட்டுமே இருப்பதாக எண்கள் இட்டு புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

டிரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட அந்த விடியோவில், தரைப்பகுதியில் வந்தே பாரத் விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்க, மேலே விரைவுச் சாலையில் வாகனங்கள் விரைகின்றன. கர்நாடகத்தின் கணிக்க முடியாத வளர்ச்சி என்று அதனை பசவராஜ் பொம்மை குறிப்பிட்டிருந்தார். இதனை நரேந்திர மோடியும் டேக் செய்திருந்தார். ஆனால், பொதுமக்களில் சிலரோ, காணாமல் போன மிச்சம் நான்கு சாலைகள் எங்கே என்று கேட்டு கருத்துகளை பதிவிட்டுக் கொண்டிருந்தனர். 

திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொண்ட 40 சதவீத கழிவு போக மிச்சத்தைத்தான் மக்கள் விடியோவில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.  சிலர், அந்த இரண்டு ரயில் வழித்தடங்களைக் கூட்டினால் கூட எட்டுதானே வருகிறது என்று கேட்டிருக்கிறார்கள்.

சிலரோ, எளிய, சாதாரண மக்களின் கண்களால் பார்க்க முடியாத சக்திக்கு அப்பாற்பட்டு இந்த நான்கு சாலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

தில்லி-மும்பை இடையே 1,386 கி.மீ. தொலைவுக்கு விரைவுச் சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய விரைவுச் சாலையாக இது அமையவுள்ளது. இதன்மூலமாக இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறையும்.

தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த விரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com