ஆசியாவின் மிகப்பெரிய விமானக் காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரில் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி இன்று முதல் 17ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏரோ இந்தியா 2023 அடையாள முத்திரையை அவர் வெளியிட்டார். பின்னர் விமானங்களின் சாகசங்களையும் பிரதமர் கண்டு ரசித்தார். கண்காட்சியில் அமெரிக்காவின் அதிநவீன எப்18, எப்16 ரக விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்களும் இடம்பெறவுள்ளன.
இதையும் படிக்க- அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது: அஜித் பவார்
இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூரு விமான கண்காட்சியில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியின் அங்கமாக தினமும் பல்வேறு நாடுகளின் போா் விமானங்களின் வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அப்போது பேசிய பிரமர் மோடி, இந்தியா புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் 100 உலக நாடுகளின் நம்பிக்கையை வளர்த்துள்ளது இந்தியா. பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புக்கான வழியை விமான கண்காட்சி திறக்கும்.
பாதுகாப்புத்துறை இல்லாத நாடுகளுக்கு இந்தியா சிறந்த சகோதரனாக உருவாகி வருகிறது. பாதுகாப்புத்துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. பாதுகாப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது. விரைவான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிவித்தார். இந்த கண்காட்சி நிகழ்வை சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டு பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


