2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு: பிரதமர் மோடி

2024-25 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதே அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு: பிரதமர் மோடி


பெங்களூரு: 2024-25 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதே அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் தளமாக மாறும் என்றார். 

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 இன் ஐந்து நாள் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு இன்று புதிய உயரங்களைத் தொட்டு அவற்றையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்றும், ஏரோ இந்தியா 2023, நாட்டின் திறன்களை விரிவடைவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

கண்காட்சியில் நூறு நாடுகள் பங்கேற்றுள்ளது, புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.  இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இது கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது. இன்று இது வெறும் கண்காட்சி மட்டுமல்ல. இது இந்தியாவின் பலம். இது இந்தியாவின் ராணுவத் துறை மற்றும் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது என்று மோடி கூறினார். 

2024-25 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே அரசின் இலக்கு என்று கூறினார். 

ஏரோ இந்தியாவின் கருப்பொருள் '100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' பல்வேறு துறைகளில் நாட்டின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. 

தொழில்நுட்பத் துறையில் கர்நாடக இஞைஞர்களின் பரந்த நிபுணத்துவத்திற்காக அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித் மோடி, பாதுகாப்பு துறையில் நாட்டை வலுவாக மாற்ற அவர்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார். 

ஏரோ இந்தியா புதிய இந்தியாவைப் பிரதிபலிப்பதாகவும், பெங்களூருவின் வானம் என்பது புதிய இந்தியாவின் திறன்களுக்கு சான்றாக மாறிவருகிறது. புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை. அதற்கு பெங்களூருவின் வானமே சான்றாகும் என்று மோடி கூறினார். 

தொழில்நுட்ப உலகில் தலைசிறந்த மாநிலத்தில் ஏரோ இந்தியா நடப்பதாகவும், இது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். 

21 ஆம் நூற்றாண்டின் இந்தியா ஒரு வாய்ப்பையும் விட்டுவிடாது என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். 

14 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியின் நினைவாக ஏரோ இந்தியா 2023 நினைவு தபால் தலையையும் மோடி தபால் தலையையும் மோடி வெளியிட்டார். 

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் உள்ளது. ஏரோ இந்தியா பாதுகாப்புத் துறைக்கு புதிய பலத்தை அளித்துள்ளது என்றார். 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமர் உறுதியாக உள்ளார் என்பதும், இதன் வெளிப்பாடே ஏரோ இந்தியா என்றும் அவர் கூறினார். 

பல நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், சிஇஓக்கள் மற்றும் சேவைத் தலைவர்கள் ஏரோ இந்தியாவில் பங்கேற்கின்றனர், இது இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பு பயணத்தை அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com