சுற்றுலா மேம்பாட்டிற்கு இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும்! 

இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் சுற்றுலாவை மேம்படுத்தலாம் என்று ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். 
சுற்றுலா மேம்பாட்டிற்கு இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும்! 

இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் சுற்றுலாவை மேம்படுத்தலாம் என்று ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். 

ஞாயிறன்று ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தைச் சந்திந்து பேசினார். அப்போது, ஹிமாசலப் பிரதேசத்தின் வளர்ச்சி, இரு மாநிலங்களிலும் சுற்றுலா, வர்த்தகத்தை மேம்படுத்துதல், போதைப்பொருள், போதைப்பொருள்களை தடுப்பது தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

ஹிமாசலமும், கோவாவும் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மாநிலங்கள் மற்றும் உலகத்திற்கான ஒருங்கிணைந்த தனித்துவமான இடமாக மாறுவதற்கன மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. இதன்மூலம் பொருளாதாரத்தை உயர்த்தி, மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. 

இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பரந்த அளவிலான சுற்றுலா குறிப்பிட்ட தொகுப்புகள் வடிவமைக்கப்படும். இது இரு மாநிலங்களிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்றார். 

கடல் மற்றும் மலை சுற்றுச்சூழல் அமைப்புகளை நன்கு புரிந்து கொள்வதற்காக எதிர்காலத்தில் இரு மாநில மாணவர்களிடையே கடல்-மலை கருப்பொருள் அறிவியல் பயிலரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com