வாராணசியில் ராகுலின் விமானத்தை தரையிறக்க அனுமதி மறுப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
வாராணசியில் ராகுலின் விமானத்தை தரையிறக்க அனுமதி மறுப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி விமான நிலையத்திற்கு இரவு 10.45 மணியளவில் வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

வாராணசி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை தரிசனம் செய்த பின்னர், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், வாராணசி விமான நிலையத்தில் கடுமையான நெரிசல் காரணமாக ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அஜய் ராய் கூறுகையில், “வாராணசி, பிரயாக்ராஜுக்கு வருகை தர ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், மாநில அரசின் அழுத்தம் காரணமாக அவரது விமானம் தரையிறங்க விமான நிலையம் அனுமதி அளிக்கவில்லை. ராகுல் காந்தியின் மீதுள்ள அச்சத்தால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அவரது விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவில்லை” என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த வாராணசி விமான நிலைய நிர்வாகம், “ராகுல் காந்தி வரவிருந்த விமானத்தை விமான நிறுவனமே பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 9.16 மணிக்கு ரத்து செய்வதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com