8 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்காதீர்! அன்புடன் எச்சரிக்கும் ஐடி நிறுவனம்!

தொழில்நுட்ப நிறுவனம் தங்கள் ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை கனிவுடன் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 
8 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்காதீர்! அன்புடன் எச்சரிக்கும் ஐடி நிறுவனம்!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் தங்கள் ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை கனிவுடன் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

நவீன காலத்தில் கூடுதல் தொகைக்காக அதிக நேரத்துக்கு பணிபுரிவது, குறைந்த ஊதியத்துக்காக பணிபுரிவது, விடுமுறை நாள்களில் பணிபுரிவது போன்றவை அதிகம் பார்க்கமுடிகிறது. 

ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டி, பெருலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மத்தியில், நிறுவனத்துக்காக பணிபுரியும் உழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்வுடன் வைத்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கும் நிறுவனங்கள் அரிது. அப்படி ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களின் கணினி திரையில் அவர்களை வீட்டுக்கு கிளம்புமாறு அறிவுறுத்துகிறது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம்.

மத்தியப் பிரதேசத்தில் சாஃப்ட் கிரிட் கம்ப்யூட்டர்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தங்கள் ஊழியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதில்லை.

அவ்வாறு 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிந்தால், கணினி திரையில் அவர்களை கனிவுடன் எச்சரிக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதிவு ஒன்றை வெளியிட்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் அணுகலாம் என்று பதிவிட்டுள்ளார். 

அதில், இது கற்பனைப் பதிவு அல்ல. உண்மைதான். இதுதான் எங்கள் அலுவலகத்தின் தன்மை. வாழ்க்கையும் பணியும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் பணிநேரம் முடிந்ததும் அவர்களை வீட்டுக்குப் புறப்பட நினைவூட்டுகிறோம். 

பணி நேரத்துக்குப் பிறகு அழைப்புகள் இல்லை. மின்னஞ்சல்கள் இல்லை. இந்த சூழலில் பணிபுரிந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க எந்தவொரு மண்டே மோடிவேஷனலும், ஃபன் ஃப்ரைடேவும் தேவைப்படாது. இந்த காலத்திலும் நாங்கள் அளவான நேரம் வேலை பார்ப்பதை நம்புகிறோம். மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறோம் எனப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com