சத்ரபதி சிவாஜியின் வீரம் மற்றும் நல்ல நிர்வாகம் நமக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மராத்தா பேரரசினை உருவாக்கிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். 1630 ஆம் ஆண்டு பிறந்த சிவாஜி அவரது வீரம், ராணுவத் தந்திரம் மற்றும் தலைமைப் பண்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பி.எட். சிறப்புக் கல்வி நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு
இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிவாஜி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவரது வீரமும், சிறப்பான நிர்வாகமும் நமக்கு ஊக்கமளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் சிவாஜிக்கு மரியாதை செலுத்துவது தொடர்பான ஆடியோ மற்றும் விடியோ ஒன்றினையும் அவர் இணைத்துள்ளார்.
மராத்தி மொழியிலும் ட்விட்டரில் பதிவிட்டு சிவாஜிக்கு பிரதமர் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

