ஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

தில்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல்

தில்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :

தில்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் தில்லியின் அசோகா சாலை பகுதியில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது நேற்று மாலை 5.30 மணியளவில் மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக ஓவைசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், நான் இரவு 11:30 மணியளவில் எனது வீட்டை அடைந்தேன். திரும்பி வந்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்து கற்கள் கிடப்பதைக் கண்டேன். மாலை 5:30 மணியளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக எனது வீட்டு உதவியாளர் தெரிவித்தார். இதுபோன்ற தாக்குதல் நடப்பது இது நான்காவது முறையாகும்.

எனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான சிசிடிவி கேமராக்கள் உள்ளன, அதை அணுகி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபி, தலைமையிலான தில்லி போலீசார், அவரது வீட்டிற்கு சென்று, சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.