'6 வயது நிரம்பிய பிறகே 1 ஆம் வகுப்பு' - மத்திய அரசு

இனி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிரம்பி இருக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இனி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிரம்பி இருக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது. 

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. 

அதன்படி, நாட்டில் பள்ளிகளில் இனி 1 ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. 

அதேநேரத்தில் 3 வயதில் குழந்தைகளை ப்ரீ-கேஜி சேர்க்கலாம், 3 ஆண்டுகள்  ப்ரீ-கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். 

குழந்தைகளை 6 வயதில் 1 ஆம் வகுப்பு சேர்க்கும்போது குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com