திருமணம் செய்யாதது விசித்திரம்! - ராகுல் காந்தி பேட்டி

தான் திருமணம் செய்துகொள்ளாதது விசித்திரமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தான் திருமணம் செய்துகொள்ளாதது விசித்திரமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இத்தாலியில் வெளியாகும் நாளிதழுக்கு அண்மையில் ராகுல் காந்தி பேட்டியளித்தாா். அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

எனது இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு நான்தான் மிகுந்த விருப்பத்துக்குரியவன். எனது இத்தாலிய பாட்டி பெளலா மெய்னோவுக்கு பிரியங்கா மிகுந்த விருப்பத்துக்குரியவா்.

நான் திருமணம் செய்துகொள்ளாதது விசித்திரமாக உள்ளது. அதைச் செய்யாதது ஏன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் குழந்தைகள் பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிா்காலத்தைப் பாா்க்க முடியவில்லை.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com