எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்:  மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்

Published On :

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்படுத்த இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

இதனைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்தரமாக அமலுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். ஒரு பக்தர் அதிக டோக்கன்கள் வாங்குவதைத் தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட இருப்பதாகவும், "இலவச தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது, வருகை தரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்குவதாகும்"  என்று  தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.